Drought-affected farmers and uploaded to online information
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த தகவல்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதன் காரணமாக பெரம்பலூர்உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களும், வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தது. அதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை களையும் விதமாக வறட்சி நிவாரண நிதி வழங்க உள்ளது.
இதனைத் தொடர்ந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த தகவல்கள் தமிழக அரசால் கணக்கீடு செய்யப்பட்டது. இவ்வாறாக கணக்கீடு செய்யப்பட்ட விவசாயிகள் குறித்த தகவல்களான விவசாயிகளின் பெயர், பயிர் செய்யப்பட்ட நிலத்தின் பட்டா எண், விவசாயிகளின் வங்கி எண், வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகள் (சதவீத அளவில்) மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்று தனியர் கல்லூரியில் குன்னம் மற்றும் ஆலத்தூர் வட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பதிவு செய்யும் நிகழ்வைத் துவங்கி உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் கு.மோகன், வட்டாட்சியர்கள் சீனிவாசன் (ஆலத்தூர்), தமிழரசன் (குன்னம்), மாவட்ட மின் ஆளுமை திட்ட மேலாளர் அருண் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.