பெரம்பலூர் மகளிர் குழுக்கள் சார்பில மது போதை எதிர்ப்பு நாள் விழிப்புணர் பேரணி நடந்தது.
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சி (மேட்டூர்) பகுதியில் வேப்பந்தட்டை சுபிக்ஷா தொண்டு நிறுவனத்தை ஏராளமான மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், மற்றும் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினியை சேர்ந்த காந்தி அமைதி மையம் ஆகியோர் இணைந்து இன்று பேரணி நடத்தினர்.
இந்த பேரணியில் மதுவின் தீமைகள் குறித்தும், அதனால் குடும்பத்திலும், சமுதாயத்திலும், தனி நபர் ஒழுக்கத்திலும், ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கோசங்கள் எழுப்பினர்.
அரும்பாவூர் பாலக்கரையில் துவங்கிய பேரணி சிவன் கோவிலில் முடிவுற்றது.
முன்னாதாக, மஞ்சினியை சேர்ந்த காந்தி அமைதி மைய ஆலோசகர் கருப்புசாமி, வரவேற்றார்.
அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் சோலை.ராமசாமி, துவக்க உரை ஆற்றினார்.
வேப்பநதட்டையை சேர்ந்த சுபிக்ஷா கிராம வளர்ச்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி, சிறப்புரை ஆற்றினார்.
மது விலக்கு மற்றும் போதை மீட்பு மைய ஆலோசகர் சத்யா கருத்துகளை எடுத்துரைத்தார்.
சுபிக்ஷா கிராம வளர்ச்சி நிறுவன பொருளாளர் கவிதா நன்றி தெரிவித்தார்.
அரும்பாவூர் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.