DSP’s suicide case: Court orders court to appear in Coimbatore court DSP’s Father

file copy
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பெண் காவல் துணைக் கண்காணிப்பாளர் தற்கொலை விவகாரம் தொடர்பாக,நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவரின் தந்தைக்கு கோவை நீதிமன்றம் மூலம் உத்திரவுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலுாரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ்.இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இந்த வழக்கு விசாரணை அதிகரியாக அப்போது திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த ஆர்.விஷ்ணுப்பிரியா நியமனம் செய்யப்பட்டார்.
இச்சூழலில் அதே ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி, துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா, திருச்செங்கோட்டில் உள்ள அவரது முகாம் அலுவலக வீட்டில் துாக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கடலுாரில் உள்ள விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர்.
மேலும்,விஷ்ணுப்பிரியா இறப்பதற்கு முன் கைப்பட எழுதியதாக கூறப்படும் கடிதங்களையும் கைப்பற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.எனினும், சம்பவம் நடந்து 3ஆண்டுகளானபோதும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவிக்கு, கோவை நீதிமன்றம் மூலம் உத்திரவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்திரவு கடிதத்தில் இந்த வழக்கு, சிபிஐ காவல் நிலையத்தினரால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்ட வழக்கு என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இம்மாதம் 9-ம் தேதி கோவை சீஃப் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.










kaalaimalar2@gmail.com |
9003770497