Perambalur: Public detain quarry lorries!

பெரம்பலூர் அருகே உள்ளது இரூர் கிராமம். இந்த கிராமத்தை சுற்றிலும் பல்வேறு கிரசர்களும், குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளுக்கு செல்லும் லாரிகள் அளவிற்கு அதிகமாக கற்களை ஏற்றிச் செல்வதால் சாலைகள் சேதமடைந்து குண்டு குழிகளாக மாறுவதோடு, பொது போக்குவரத்தையும் சீர் குலைப்பதாகவும், மேலும், குவாரிகளில் பாறைகளை தகர்க்க வெடிகள் வெடிக்கும் போது வீடுகள் அதிருவதுடன் விரிசல்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்த அப்பகுதி மக்கள் இன்று ஒன்று திரண்டு அவ்வழியாக வந்த லாரிகளை சிறைப்பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் வரை லாரிகளை விடுவிக்கப்போவதில்லை என தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!