Fleece payment to be ignored all party MLAs, MPs and officials with free seat: generous private schools!
இந்திய ஜனநாயக நாட்டில், மக்கள் எஜமானர்கள் என்றாலும், மக்கள் பெற வேண்டிய பயனை முழுவதுமாக அனுப்பவித்து மகிழ்பவர்கள், மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளுமே என்பதை யாராலும், மறுக்க முடியாது. அத்தி பூத்தாற் போன்று எங்கோ ஒரு அதிகாரி, அரசியல்வாதி வந்தாலும், பணி செய்ய விடாமல், பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, காத்திருப்போ அல்லது வேறு துறைக்கு மாற்றி வருகின்றனர். இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் இது தான் நிலை. தமிழ்நாட்டை காங்கிரஸ், திமுக, அதிமுக என ஆண்டாலும், தரமான கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே, உள்ளது. காமராஜர் அரசுக்கு பின்னர் வந்த எந்த ஒரு அரசும் இதுவரை அவருடைய சாதனை தொட முடியவில்லை.
இன்று கல்வி, மருத்துவம், சாலை தனியாருக்கு தாரை வார்க்கப்பபட்டு, கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வருகிறது. கல்வி, சாலை மருத்துவம் போன்ற வற்றில், அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு, பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது போன்று இன்று கல்வி நிலையங்களை நேரடியாகவோ, பினாமியாகவோ நடத்தி வரும் பெரும்பாலனோர் அரசியல்வாதிகாளாக இருப்பதால் கல்வி கட்டணத்தை பற்றி வாய்திறப்பதில்லை. மேலும், ஆளும், எதிர் கட்சி உள்ளிட்ட உதிரி கட்சிகளுக்கும் கட்டணம் இல்லாமல், அவரது வாரிகளுக்கும் கல்வி வழங்கப்படுகிறது. இதே போல் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்க அவர்களுக்கும் வாரிசுதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இது மட்டும் அல்லாமல், அவ்வப்போது நன்கொடைகளை கட்சி நிகழச்சிகளுக்கு ஏற்ப வசூலித்து கொள்கிறார்கள். பல கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீத அளவு சீட்டும் ஒதுக்கி கொடுக்கிறார்கள். கல்வி நிறுவனங்களுடன் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டுக் கொள்ளை அடிப்பதால் கேள்வி கேட்க நாதியில்லாமல் போய் விட்டது.
வாய் கிழிய பேசும் எந்த ஒரு அரசியல் கட்சியும், கல்வி நிறுவனங்களில் அரசு நிர்ணயித்த கட்டண பட்டியலை வைக்க கோருவதில்லை. நீதிமன்றம் உத்தரவு பிறப்பு பிறப்பித்தாலும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அதை பயன்படுத்தி, ஆதாயம் அடைந்து விடுகின்றனர். ஏமாறுவதோ அப்பாவி ஏழை மக்களும். நடுத்தர வர்க்கத்தினருமே
அரசு பள்ளிகளை மூட காரணம் இதுவும் ஒன்றாகும், அரசு பள்ளிகளை மூடி விட்டால், அருகில் உள்ள தனியார் பள்ளியில் கட்டாயமாக சேர்க்க நிர்பந்திற்கு மக்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.
மறைமுகமாக ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் சொல்லி வைத்தார் போல் வாய் திறப்பதே இல்லை. ஓட்டு மக்களிடம், ஊழியம் செய்து தனியாரிடம் என்ற நிலைமையரிக விட்டது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள், அதிகாரிகள், தங்களது குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தி இருந்தால், அதை வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டியதுடன் அனுப்பி வைத்தால் காலைமலரில் வெளியிடப்படும்