Fodder Development Scheme may apply to the State seeking to benefit under: Perambalur collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:

azolla பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2016 – 2017-ம் ஆண்டிற்கு இறவையில் வீரிய ஒட்டு ரக கம்பு நேப்பியர் தீவன பயிர் வளர்த்தல், மானாவாரியில் தீவன சோளம் மற்றும் காராமணி வளர்த்தல், இறவையில் சான்றளிக்கப்பட்ட தீவன சோள விதை உற்பத்தி செய்தல், மின்சார புல் நறுக்கும் கருவி, கால்நடைகளின் புரதச்சத்தை அதிகரிக்க அசோலா வளர்த்தல், ஊறுகாய் புல் தயாரித்தல் மற்றும் தீவன அகத்தி மரக்கன்றுகள்; வளர்த்தல் போன்ற திட்டங்கள் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதனடிப்படையில் இறவையில் வீரிய ஒட்டு ரக கம்பு நேப்பியர் தீவன பயிர் வளர்த்தல் திட்டத்தின் பயன்பெற விரும்புவோர் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தில் நீர்பாசன வசதி உள்ள, இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாத நபராக இருத்தல் வேண்டும்.

குறைந்தது 2 கால்நடைகளுக்கு மேல் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஒரு நபருக்கு 0.25 ஏக்கர் வீதம் 200 ஏக்கரில் வீரிய ஒட்டு ரக கம்பு நேப்பியர் தீவன பயிர் வளர்க்க 800 பயனாளிகளுக்கு, 0.25 ஏக்கருக்கு 4000 புல் கரணைகள் வீதம் 200 ஏக்கருக்கு 32,00,000 புல் கரணைகள் வழங்கப்பட உள்ளது.

மானாவாரியில் தீவன சோளம் மற்றும் காராமணி வளர்த்தல் திட்டத்தில், பயன்பெற விரும்பும் நபர்கள் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தில் நீர்பாசன வசதியற்ற, இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாத நபராக இருத்தல் வேண்டும். குறைந்தது 2 கால்நடைகளுக்கு மேல் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஒரு நபருக்கு 0.25 ஏக்கரில் பயிரிட 3கி தீவன சோளம் மற்றும் 1கி காராமணி தீவன விதை வீதம் 4000 பயனாளிகளுக்கு 1000 ஏக்காpல் பயிரிட 12,000கி தீவன சோளம் மற்றும் 4000கி காராமணி விதைகளும் வழங்கப்பட உள்ளது.

இறவையில் சான்றளிக்கப்பட்ட தீவன சோள விதை உற்பத்தி செய்தல் திட்டத்தில் பயன்பெற விரும்பும் நபர்கள் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தில் நீர்பாசன வசதி பெற்று, தீவன விதை உற்பத்தியில் முன்அனுபவம் மற்றும் விருப்பமுள்ள விவசாயிகளாக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் இறவையில் சான்றளிக்கப்பட்ட தீவன சோளம் 5 ஏக்கரில் வளர்த்து விதை உற்பத்தி செய்ய இலவசமாக விதை வழங்கப்பட உள்ளது. மேலும் அவ்வாறு விவசாயிகளால் சாகுபடி செய்து உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை அன்றைய சந்தை விலையோடு பத்து ரூபாய் கூடுதலாக வழங்கி இத்துறையால் பெற்றுக்கொள்ளப்படும்.

மின்சார தீவன புல் நறுக்கும் கருவி பெற விரும்பும் பயனாளிகள் கால்நடைகளின் பால் உற்பத்தியை பெருக்கும் வகையிலும், பசுந்தீவனங்களை முழுமையாக உட்கொள்ளும் வகையிலும், குறைந்தது 0.5 ஏக்கரில் இறவையில் பசுந்தீவனம் பயிரிட்டிருக்க வேண்டும். இரண்டு முதல் நான்கு கால்நடைகளைக் கொண்ட, மின்சார வசதி உள்ள, 30 விவசாயிகளுக்கு 60 சதவீத மானிய விலையில் மின்சார தீவன புல் நறுக்கும் கருவி வழங்கப்பட உள்ளது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கால்நடைகளின் தீவன பற்றாக்குறையை போக்கவும், கால்நடைகளின் புரதச்சத்தை அதிகரித்து பால் உற்பத்தியை பெருக்கவும், புரதச்சத்து மிகுந்த அசோலா (பசும் பாசியிலை) உற்பத்தி செய்திட 100 சதவீத மானியத்தில் ரூபாய் 2500 மதிப்புள்ள Plastic tray மற்றும் ரூபாய் 50 மதிப்புள்ள இடுபொருட்களும் 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

ஊறுகாய் புல் தயாரித்தல் திட்டத்தின் கீழ் தீவன பற்றாக்குறையை போக்க, தீவன ஊற்பத்தி அதிகமாக உள்ள காலங்களில் தீவனத்தை சேமித்து, பற்றாக்குறை உள்ள காலங்களில் கால்நடைகளுக்கு உபயோகத்திடும் வகையில்; ஊறுகாய் புல் தயாhpத்து கால்நடைகளுக்கு வழங்கிட இலவசமாக 1 பயனாளிக்கு நான்கு (4 x 250கி =1000கி) பைகள் வீதம் 300 பயனாளிகளுக்கு 1200 ஊறுகாய்புல் தயாரிக்கும் பைகள் வழங்கப்பட உள்ளது.

மண்புழு உரம் தயாரித்தல் திட்டத்தின் கீழ் கால்நடைகளின் கழிவுகளை பயன்படுத்தி நிலங்களின் மண் வளத்தை பெருக்கிட மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 100 விவசாயிகளுக்கு தஞ்சாவூர் மாவட்டம், நடுவூர் மாவட்ட கால்நடை பண்ணையில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒரு நபருக்கு போக்குவரத்து படியாக ரூபாய் 500- வழங்கப்படவுள்ளது.

தீவன அகத்தி மரக்கன்றுகள் வளா;த்தல் திட்டத்தின் கீழ் கால்நடைகளின் உற்பத்தியினை பெருக்கவும், கால்நடைகளின் தீவன பற்றாக்குறையினை போக்கவும் கால்நடை பராமாpப்புத்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட கால்நடை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் அகத்தி மரக்கன்றுகள் 1 பயனாளிக்கு 10 மரக்கன்றுகள் வீதம் 1500 பயனாளிகளுக்கு 15000 மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பயனாளிகளுக்கு இதனை வழங்க முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், சுய உதவி குழுவில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

மாநில தீவன அபிவிருத்தி திட்டத்திற்கு 50 சதவீத பயனாளிகள் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலமும் 50 சதவீத பயனாளிகள் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

ஆகவே, இத்திட்டங்களில் இதுவரை பயன்பெறாத பெரம்பலூர் மாவட்ட கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை சந்தித்து திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், கைப்பேசி எண், தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தக நகல் ஆகியவற்றோடு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை துணை ஆணையரை 04328-225799 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!