Free special medical camp for Infertility, Baby Lakshmi test tube baby centre going on feb.26
பெரம்பலூர் லட்சுமி டெஸ்ட்டியூப் பேபி சென்டர் மூலம் இலவச குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும் பிப்.26ம் தேதி லட்சுமி மருத்துவமனையில் நடக்கிறது என, மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் லட்சுமி டெஸ்ட்டியூப் பேபி சென்டர் மற்றும் லட்சுமி மருத்துவமனை இணைந்து நடந்தும் இலவச குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை லட்சுமி மருத்துவமனையில் நடக்கிறது. முகாமில், மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் எஸ்.டி. ஜெயலெட்சுமி உள்ளிட்ட சிறப்பு மருத்துவக் குழுவினர் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
முகாமில், கரு முட்டை குழாய்களில் அடைப்பு அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதற்கான பரிசோதனை, அனைத்து ரிப்போர்ட்டுகளும் சரியாக இருந்தும் கருவுற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும், ஃபைப்ராய்ட் அடினோ மையோஸிஸ் எண்டோமெட்ரியோஸிஸ், ஓலி கோஸ்பெர்மியா அசூஸ்பெர்மியா உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
மேலும், இலவசமாக ஸ்கேன், ரத்தம் சிறுநீர் பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.
எனவே, இம்முகாமில் குழந்தையில்லாத தம்பதிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.