பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அரசு இ-சேவை மையங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம். மேலாண்மை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இம்மையங்கள் காலை 9.45 மணி முதல் மாலை 5.45 வரை செயல்படும். பொதுமக்கள் இம்மையங்களுக்குச் சென்று அரசின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
பள்ளித்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் மாணவ மாணவிகள் பல்வேறு சான்றிதழ்களைப் பெறுவதற்காக அதிக அளவில் விண்ணப்பம் செய்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி நாளை 29.05.2016 (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கும் அரசு இ-சேவை மையங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
எனவே பொதுமக்கள், மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.