Grace Lalrindiki Bachau to take over as Perambalur District Collector!
பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக இருந்த க.கற்பகம், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்திற்கு கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், புதிய கலெக்டராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தனது பொறுப்புகளை புதிய கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவிடம், ஒப்படைத்தார். பின்னர், கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சார் கலெக்டராகவும், தொழில் மற்றும் வணிகத்துறை கூடுதல் ஆணையராகவும் பணியாற்றிய நான் தற்போது பெரம்பலூர் கலெக்டராகவும், பொறுப்பேற்றுள்ளேன். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், என தெரிவித்தார்.