Granite worth several crores robberies struggle notice


பெரம்பலூர் மாவட்டத்தில உரிய அனுமதியின்றி பல கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் கொள்ளை! மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

அ.சுப்பிரமணியன் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பெரம்பலூர் மாவட்டம், வடக்கலூரில் குடிதண்ணீர் பிரச்சனை நீக்க வேண்டும், மேலும், வடக்கலூர், கத்தாழைமேடு, அகரம், பழையஅரசமங்கலம், ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் செய்த பணிகள் குறித்த மூன்று அறிக்கை மற்றும் செலவு விவரங்களை வெளியிடவேண்டும், வடக்கலூ அகரம் ஏரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் வெட்டி கடத்த யாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதோடு மட்டுமில்லாமல் இரவில் கிராணைட் கடத்தும் கொள்ளையர்களை பிடிக்காதது ஏன் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் … அக்ரஹாரம், ஒகளூர், வடக்கலூர் ஏரிகளை தூர் வார விவசாயிகளிடம் இருந்து தூர் வரா ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு தூர் வாரப்பட்ட து. ஆனால், அதே ஏரிககளுக்கு அரசும் டெண்டர் விடப்பட்டு, அரசாங்கம் முழுத் தொகையையும் வழங்கி உள்ளதால் விவசாயிகளிடம் வசூல் செய்த பணத்தை வழங்க வேண்டும், என்பதோடு அரசு நிலங்கள் அபகரிப்பு செய்யப்பட்டள்ளதாகவும், அதனை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான நோட்டீசால் கலெக்டர் உள்பட அரசு அதிகாரிகள் ஊழலுக்கு துணை போகிறார்களா அல்லது கையாளதாக தனமான என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெரம்பலூர் கலெக்டரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைள் இணையதளங்கள், சமூக வலைதளங்கள் செய்திகள் வெளியாகிய நிலையில் அகரம்சீகூர் போன்ற பகுதிகளில் பட்டப்பகலிலேயே ஆற்று மணல் கடத்துவம் தற்போது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!