Hotels in Perambalur stop the breakfast; Water shortages Effects

பெரம்பலூர் தண்ணீர் தட்டுப்பாட்டால் சில ஹோட்டல்களில் இன்று காலை டிபன் தயார் செய்து வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது.

பெரம்பலூரில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 144 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட வறட்சியால் நகர் புறங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகு குறைந்து விட்டது.

மக்கள், தங்கள் தேவைக்கு 8000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கருக்கு ரூ. 800 வீதம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 20 தண்ணீர் வண்டிகள் இரவு பகலாக ஓடியும் போதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. தண்ணீருக்காக காசு கொடுத்தும் அதிக நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

அரசு இயந்திரமோ ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்யும் பொதுமக்களை இயற்கை இடர்பாடுகளில் இருந்து காப்பதாகதான் பல்வேறு வரிகளை வசூல் செய்கிறது. அவ்வாறு கோடிக்கணக்கில் ஆண்டு தோறும் வசூல் வரிப்பணத்தை வசூல் செய்யும் நகராட்சி பொதுமக்களுக்காக சேவை செய்ய முன்வருவதில்லை.

அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதி வீடுகளுக்கு தனியாக லாரிகள் மூலம் தண்ணீர் மக்கள் வரிப்பணத்தில் கள்ளத்தனமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆங்காங்கே சில தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் சில பகுதிகளில் தண்ணீரை டேங்கர் லாரிகளில் வினியோகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சில ஹோட்டல்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டிய லாரிகள் தண்ணீர் வினியோகம் செய்ய நேற்று இரவு முதல் இன்று காலை தண்ணீரை வினியோகம் செய்யாததால் இன்று இட்லி, தோசை, பூரி, இடியாப்பம் போன்ற காலை சிற்றுண்டி உணவுகளை தயாரிப்புகளை நிறுத்தியது. இதனால் இன்று ஹோட்டல் கடைகளுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாகளால் தொடர்ந்து உணவுவிடுதிகளை நடத்துவது குறித்து யோசனை செய்து வருகின்றனர். வழக்கமாக சில உணவங்களில் சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் வேறு கடைகளை நோக்கி சென்றனர்.

ஹோட்டல்களில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது தனிநபரை சார்ந்தது அல்ல! அங்கு வேலை செய்யும் பணியாளர்கள், கட்டிட உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், மற்றும் அரசுக்கு வரி என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை அடங்கி உள்ளது.

தற்போது தண்ணீர் பிரச்சனை இன்னும் இரு மாதங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!