Illegal drinking water absorbed electrical motor pumb in Agramsegoor || அகரம்சீகூரில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சிய மின் மோட்டார்கள் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டம், அகரம்சிகூர் ஊராட்சியில், சட்ட விரோதமாக ஊராட்சி குடிநீர் குழாயில் இருந்து மின் மோட்டார்களை வைத்தும் மற்றும் புதிதாக பைப் லைன் அமைத்து தண்ணீர் உறிஞ்சபடுவதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு அகரம்சிகூர் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

அதன் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று காலை வேப்பூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவர்மண் தலைமையில் ஊராட்சி பணியாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அகரம்சிகூர் கிராமத்தில் சோதனை நடத்தினர்

அப்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வீட்டின் உரிமையாளர்கள் மின் மோட்டார்களை வைத்து குடிநீர் உறிஞ்சியதையும் மேலும் கிராமங்களுக்கு குடிநீர் குழாயில் இருந்து வரும் குடிநீரை சிலர் தங்களது சொந்த தேவைக்காக அனுமதியின்றி குடிநீர் குழாயை சேதபடுத்தி அதிலிருந்து புதிய பைப் லைன் அமைத்து குடிநீரை தங்களது வீடுகளில் பயன்படுத்தி வந்ததை கண்டு பிடித்தனர். மின் மோட்டார்களையும் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணத வறட்சி காரணமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஆங்காங்கே குடிநீருக்காக பொது மக்கள் சாலை மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது போன்று வேப்பூர் சுற்று வட்டார கிராமத்தில் இது போன்று சட்டவிரோதமாக மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மங்களமேடு போலீசார் பாதுகாப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!