In Perambalur animal specialized at the medical camp
பெரம்பலூர் அருகே உள்ள கத்தாழைமேடு கிராமத்தில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது
பெரம்பலூர் மாவட்ம், குன்னம் வட்டம், வடக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட கத்தாழைமேடு கிராமத்தில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
கால்நடை பாதுகாப்பு திட்டத்தின் ( 20l6 – 17) கீழ் கால்நடைகளுக்கு மருத்து முகாம் சுமார் 900 மாடுகள் மற்றும் வெள்ளாடுகளுக்கு ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், சினை ஊசி, மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டது
பெரம்பலூர் மண்டல இணை இயக்குநர் Dr. செங்கோட்டையன் முன்னிலையில் நடந்த இம்முகாமில், ஒகளுர் கால்நடை உதவி மருத்துவர் கல்பனா, அகரம்சீகூர் கால்நடை உதவி மருத்துவர் சரவணன், கால்நடை ஆய்வாளர் பன்னீர் செல்வம், உதவி ஆய்வாளர் சின்னதுரை, உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் வடக்களூர், கத்தாழைமேடு, அகரம், உட்பட கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
இறுதியாக முகாமில் சிறந்த 10 கிடேரி கன்று குட்டிகளை தேர்வு செய்து அவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் கால்நடைத்துறை சார்பில் வழங்கப்பட்டது.