In Perambalur break-in grocery shop items worth Rs 60 thousand, including Rs 1 lakh theft
பெரம்பலூர் கல்யாண் நகரில் குரும்பலூர் புதூரை சேர்ந்த சின்னதுரை என்பவர் மளிகை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை வந்து கடை திறக்க சென்றார். அப்போது மளிகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரிவ வந்தது.
இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவலை தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் கடையினுள் இருந்த ரொக்கம் ரூ.60 ஆயிரம் உள்ளிட்ட 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்திவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.