In Perambalur Co-operation Department of crackers beginning sales and openig store today
பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பணை பண்டகசாலை மூலம் பட்டாசு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. எளம்பலூர் சாலை மற்றும் பாலக்கரை ஜே.கே திருமண மண்டபம் அருகில் திறக்கப்பட்ட பட்டாசு கடைக்கு அதன் தலைவர் கி.ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.
கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி பட்டாசு கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். சரக துணைப்பதிவாளர் பாண்டித்துரை, இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சிவக்குமார் மொத்த விற்பணை பண்டக சாலையின் மேலாண் இயக்குனர் ஆழ்வார்குமார் மேலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் இயக்குனர் ஜெகதீசன் நன்றி கூறினார்.