In Perambalur despite the ban at the Bulls unleashed : police blocked

annamangalam-jaalikattu-2017
பெரம்பலூர் அருகே அன்னமங்கலம் கிராமத்தில் போலீசாரின் தடையை மீறி இந்து, முஸ்லீம், கிருஸ்துவர் என மும்மதத்தினரும் ஜாதி மதம் பாராமல் மத நல்லிணக்கத்தோடு தடையை மீறி ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் இதனிடையே உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதித்துள்ளதால், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்காமல் தடுக்க அன்னமங்கலம் கிராமத்தில் இன்று காலை முதலே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே 20க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வந்த மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அன்னமங்களம் கிராமத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என மும்மதத்தினரும் ஜாதி மதம் பாராமல் மத நல்லிணக்கத்தோடு பூஜைகள் செய்து, திடீரென மாடுகளை அவிழ்த்து கூட்டத்திற்குள் ஓட விட்டனர்.

மாடுகள் கூட்டத்திற்குள் சீறிப்பாய்ந்து ஓடி வந்ததும், அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் சிதறி ஓடினர். மாடு பிடிவீரர்கள் காளைகளை துரத்தி பிடித்தனர்.

இதனையறிந்த போலீசார் மாடுகளை ஓட விடாமல் தடுத்தனர். இதன் காரணமாக பொது மக்கள் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு, பெரும் பரபரப்பும் நிலவியது.

அன்னமங்கலத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் க.சுகன்யா தெரிவித்ததாவது : நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வழிபாடு முடிந்த உடன் காளைகள் அவிழ்த்து விடவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் அவிழ்த்துவிட்டுள்ளோம். ஓரிரு காளைகள் களத்திற்கு சென்ற உடன் மற்ற காளைகளை போலீசார் தடுத்து நிறுத்தி விடடனர். வரும் ஆண்டு இதே போல் தடை தொடருமானால் இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு வெகு சிறப்பாக நடத்தி தமிழர் என்ற பெருமையை நிலைநிறுத்துவோம். பீட்டா அமைப்பு தடையால் தமிழர்கள் நாங்கள் ஒன்று பட்டுள்ளோம். அடுத்த ஆண்டு தடைவிதித்தாலும் எங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு நடத்துவது என தெரிவித்தார். அப்போது அரது தந்தை கணேசன் உள்பட பலர் இளைஞர் பட்டாளம் உடனிருந்தனர்.

இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் பூலாம்பாடி, தொண்டைமாந்துறை, விசுவகுடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஜல்லிகட்டில் தடை மீறி காளைகளை கட்டவிழ்த்து விட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!