In Perambalur happens at the state level taekwondo championship tomorrow
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் இராமசுப்பிரமணியராஜா விடுத்துள்ள தகவல்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு விடுதிகளுக்கிடையேயான 2016-2017-ஆம் ஆண்டிற்கான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வரும் (நவ.6.) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி அளவில் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் கிருஷ்ணகிரி, கடலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு விடுதிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டிகள் சிறுவர், சிறுமியர் இருபாலாருக்கும் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மற்றும் மேற்பார்வையாளராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தலைமை அலுவலக மேலாளர் க.சுப்புராஜ் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க உள்ளார் என தெரிவித்துள்ளார்.