In Perambalur : Job fair of private companies by the Pudhuvalvu thittam
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள MNC நிறுவனமும் வேலூரில் இந்திய அளவில் புகழ்பெற்ற தனியார் NTTF என்ற நிறுவனமும் இணைந்து பயிற்சி மற்றும் ஊதியத்துடன் கூடிய உணவு, தங்குமிடம் போன்ற சலுகைகளுடன் டிப்ளமோ சான்றிதழ் வழங்குகிறது.
இப்பயிற்சிக்குரிய வேலைவாய்ப்பு முகாம் வரும் 08.09.2016 வியாழன் அன்று காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இம்முகாமில் 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள், 10-வது, +2 கல்வித்தகுதியுடன் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ் மற்றும் 2 புகைப்படத்துடன் கலந்து கொள்ளவேண்டும்.
மேலும், இம்முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெறுபவர்களுக்கு முதல் வருடம் மாதந்தோறும் ரூ.5,500-ம் 2-வது வருடம் ரூ.6,500-ம் 3-வது வருடம் ரூ.8,000-மும் 4-வது வருடம் ரூ.10,000-ம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
பயிற்சிக்கு பின் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். எனவே, இளைஞர;கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.