In Perambalur near the dairy farmers have money in the bank to demand payment in cash to the road blockade

பெரம்பலூர் அருகே பால் கொள்முதலுக்கான பணத்தை வங்கியில் செலுத்தாமல் ரொக்கமாக வழங்க கோரி விவசாயிகள் நடத்திய சாலைமறியல் போராட்டத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், உடும்பியம் கிராமத்திற்கு உட்பட்ட உடும்பியம், கள்ளப்பட்டி, நரசிங்கபுரம், பகுதியில் விவசாயத்திற்கு இணையாக பால் உற்பத்தி தொழிலும் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் மாதம் ஒன்றிற்கு ரூ. 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் பாலை உடும்பியத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பாலை ஊற்றி வருகின்றர். கடந்த 100 நாட்களாக கொள்முதல் செய்யப்பட்ட பாலிற்கு உரிய தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவததாகவும், மேலும், கொள்முதலுக்கான பணத்தை பூலாம்பாடி இந்தியன் ஓவர்சியஸ் வங்கியில் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், வங்கி அதிகாகரிகள் நாள் ஒன்றுக்கு ரூ. 2ஆயிரம் மட்டுமே வழங்குவதால், பால் கறவை மாடுகளுக்கு உண்டான தவிடு புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களை வாங்கி போடமுடியாமலும், குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமலும், குழந்தைகளுக்கு கல்வி கட்டணங்களை செலுத்த முடியாமலும் பல்வேறு வகையில் அவதியுறுவதாக பல முறை மாவட்ட ஆட்சியர் உள்பட அனைத்து அதிகாரிகளுக்கு மனுவும் கொடுத்துள்ளனர்.

அதன் பேரில் உரிய தொகையை விவசாயிகள் கணக்கில் செலுத்தப்பட்டும் முழுப்பணம் வழங்காத வங்கி அதிகாரிகளை கண்டித்து இன்று பெரம்பலூர் ஆத்தூர் முக்கிய சாலையில் அமர்ந்து தீடீரென அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.

தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் சமான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்களுக்கு தங்களுக்கு உரிய தொகை வழங்கும் வரை சாலை மறியலை கைவிடமாட்டோம் எனத் தெரிவித்தனர்.

இதனால் போலீஸ் தரப்பினருக்கும், விவவாயிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் தள்ளு முள்ளு நடந்தது.

பின் வாங்கிய போலீசார்

பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் கைது செய்வோம் என்று தெரிவித்து உடன் அனைவரும் திரண்டு மாடுகளுடன் காவல் நிலையத்திற்கு வருவதாக தெரிவித்தனர். மேலும், காவல் துறையினர் காலில் விழுந்து தங்களுக்கு உரிய பணத்தை பெற்றுத் தரும் படி கேட்டுக் கொண்டு போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். இந்த பரபரப்பான சம்வத்தால் சுற்று வட்ட கிராமக்களும் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கினார். தங்கள் அதிகாரம் பலிக்காது, மேலும், கலவரமாகி விடும் நினைத்த போலீசார் பொதுமக்களிடம் அதிகாரம் பிரயோகம் செய்தவிதில் இருந்து பின்வாங்கினர்.

போரட்டத்தின் போது செல்ல முயன்ற வாகனங்களின் முன்பு படுத்தும், வெயிலில் படுத்தும் சாலை மறியல் போரட்டத்தை தொடர்ந்தனர். விவசாயிகளுக்கு ரொக்கமாக பணம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததின் பேரில் ஒரு வழியாக விவசாயிகள் போரட்டத்தை கைவிட சம்மதித்தனர். மேலும், வாக்குறுதி அளித்தபடி பணம் வழங்கா விட்டால் மாடுகளை காவல் நிலையம், வட்டாசியர் அலுவலகம், கோட்டாசியர், மாவட்ட ஆட்சியர்அலுலங்களிலும் கொண்டு வந்து கட்டி விட்டு சென்று விடுவோம் என்றும் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் பெரம்பலூர் – ஆத்தூர் சாலை வழியாக ஆத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், அரும்பாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் கி.மீ கணக்கில் நின்றது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மனிதாபிமானம் :

சாலைமறியலின் போது குழந்தை ஒன்று காரில் உடல் நிலை சரியில்லாமல் வந்ந காரை வழிவிட்டு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!