In Perambalur skating competition at the state level: 3 Days going
scttingபெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.1.10கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்களுக்கு இந்த விளையாட்டு மைதானம் பெரிதும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.

200 மீட்டர் சுற்றளவுடன் கூடிய இந்த விளையட்டு மைதானத்தில் 22.10.2016 அன்று மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெறவுள்ளது.

ஆண்களுக்கு 22.10.2016 அன்றும், பெண்களுக்கு 24.10.2016 அன்றும், இருபாலருக்குமான சாலையில் செய்யக்கூடிய ஸ்கேட்டிங் போட்டி 23.10.2016 அன்றும் நடைபெறவுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்கி நடைபெறவுள்ளது. 11,14,17 மற்றும் 19 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இப்போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர். இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் நபர்களிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவுகளில் தலா 9 பேர் வீதம் 72 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவோர் 21.12.2016 முதல் 25.12.2016 வரை கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காம் என்ற இடத்தில் நடைபெறும் தேசியப்போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.

இப்போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பவோர் விண்ணப்பிப்பதற்கான நுழைவுப்படிவங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு ஜீன் மற்றும் ஜீலை மாதங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் ஒவ்வொருவரும் தலா 4 நுழைவுப்படிவத்தினை தங்கள் பள்ளிகளிலிருந்து பெற்று அதனை பூர்த்திசெய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் போட்டி நடைபெறும் இடத்திற்கு கொண்டு வரவேண்டும். போட்டி நடைபெறும் நாட்களில் காலை 7 மணிக்கு பெயர் பதிவு தொடங்கிவிடும்.

எனவே, மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்குபெற விரும்பும் நபர்கள் உரிய நாட்களில் உரிய நேரத்திற்குள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்திற்கு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயனை 8608479293 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!