In Perambalur sub jail prisoners Jail dept. inhuman action of the judges went to inspection

court-perambalur

பெரம்பலூர்: உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பெரம்பலூர் கிளைச்சிறையில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு, மற்றும், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பெரம்பலூர் கிளைச் சிறையில் இருக்கும் கைதிகளை பார்க்க வருவேர்களிடம், தலைக்கு ரூ.100 வசூலிப்பது, கைதிகளுக்கு, முறையாக சுத்தமான குடிநீர் வழக்காமல், இருப்பது, குளிக்க தண்ணீர் கொடுக்காமலும், அனுமதிக்காமலும், தரமற்ற அரிசியில் உணவு சமைத்து வழங்குவது,

கைதிகள் கொசுக்கடியால் அவதிப்படுவது மற்றும், பணம் தருவோர்க்கு சரக்கு, பீடி, சிகரெட், உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வது, உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை தீடீர் ஆய்வில் தெரியவந்தது, மேலும், கைதிகளை சிறைத்துறையினர், தரக்குறைவாக நடத்துவதுடன், ஒரு சிலரை கொடூரமாக தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

குடிநீர், குளித்தல் மற்றும், கழிப்பிட குறைபாடுகளை கண்டறிந்த நீதிபதிகள் சிறைத்துறையினரை கண்டித்தனர். மேலும், இது குறித்து உயர்நீதி மன்றத்திற்கு ஆய்வு அறிக்கை சமர்பிக்க உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!