In Perambalur The awareness program for students at the Indian movement purity!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பாரத இயக்கத் திட்டம் குறித்தும், கழிவறையை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களிடத்திலும், மாணவ-மாணவிகளிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான பேரணியை மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன் இன்று(20.10.2016) கொடி அசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற அலுவலகம், ஆதிதிராவிடர் காலனி வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இப்பேரணியில் சுகாதார வாசகங்கள் அடங்கிய பதாகை, தூக்கட்டை மற்றும் விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வீடு வீடாக மாணவிகளால் விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட அரசு பணியளர்கள் கலந்துகொண்டனர்.