Indian Prime Minister to the possibility of the crop insurance program, Employment agencies apply

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பணியாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணித் தேர்வு முகமை மூலம் (Placement Agency) நிரப்பிட திட்டமிடப்பட்டுள்ளது. பணித்தேர்வு முகமை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய உள்ள பணியாளர் பயிர் அறுவடை பரிசோதனை தளைகளின் தேர்வுப்பணி அறுவடைப்பணி மற்றும் அதைச் சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த இளநிலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புடன் கனிணி இயக்கம் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், வேளாண்மைத்துறை மற்றும் புள்ளியியல் துறையில் பணிபுரிந்து இப்பணியை மேற்கொள்ள ஆர்வமுள்ள ஒய்வு பெற்ற அலுவலர்களும் தேர்வு செய்ய பரிசீலிக்கப்படுவர்.

மேற்கண்ட பணியிடங்கள் யாவும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.10,000.- வீதம் பணித்தேர்வு முகமை மூலம் வழங்கப்படும்.

எனவே, இப்பணியினை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பதிவுத்துறைகளின் மூலம் பதிவு செய்து செயல்பட்டு வரும் பணிநியமன முகமைகள் (Placement Agency) பணியாளர்களை தேர்வு செய்து வழங்க தங்களது முகமையின் அடிப்படை விவரங்கள் அனுபவம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை வழங்க சேவை கட்டணம் ஆகியவற்றை பெரம்பலூர் மாவட்ட இணை இயக்குநர் (வேளாண்மை) என்ற முகவரிக்கு 22.12.2016 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் முகமை உடனடியாக ஒப்பந்த பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!