Iravinil Attam Par! A must watch movie with the family!
இரவினில் ஆட்டம் பார்! திரைப்படத்தை இயக்குநர் தமிழ்ச்செல்வன் எழுதி இயக்கி உள்ளார். ஆர்.எஸ்.வி மூவி தயாரிப்பில் சேலம் ஆர். சேகர் தயாரித்துள்ளார். நல்லத்தம்பி இசை அமைத்துள்ளார். ஜினோபாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இன்றைய சமூக அவலத்தையும், இளைஞர்கள் மாணவர்களை போதைக்கு அடிமையாகி பலர் சீரழிந்து நிலையை நிகழ்கால கண்ணாடியாக இந்த இரவினில் ஆட்டம் பார் வெளியுலக்கு எடுத்து காட்டி உள்ளது.
போதை பிஸ்கட்டுகள், போதை மாத்திரைகள் உள்ளிட்ட வஸ்துக்களால் மாணவிகள் – மாணவர்கள் பழக்கி அவர்களை பாதிக்கப்பட செய்வதோடு, அவர்கள் குடும்பத்தார்களிடம் மாணவர்களின் வீடியோ எடுத்து பெற்றோர்களின் செல்போனுக்கு அனுப்பி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் கொள்ளை கும்பலை அழிக்கும் ராபர்ட் என்ற திரைமறைவு கதாநாயகனை கண்டுபிடிக்கும் படமே “இரவினில் ஆட்டம் பார்”
ஒரு குத்துப்பாட்டு, ஒரு காதல் பாட்டு, சண்டைக் காட்சிகள், மேக்னைட் சுரங்கள் என சுருக்கமாக விறுவிறுப்பாக படம் நகர்கிறது. படம் முழுக்க சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு, அப்பகுதி மக்களின் வட்டார வழக்கு மொழியை அப்படியே படத்தில் கொடுத்துள்ளனர்.
போதைக்கு அடிமையான குழந்தைகளின் பெற்றோர்களாக நடித்துள்ள ஹீரோ உதயா @ உதயகுமார் நடித்துள்ளார். ஹீரோயினாக மல்லி, திருமகள் தொடர்களில் கிரேசியும், கூடவே இருக்கும் குற்றவாளியான போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டுபிடிக்கும், ஹீரோ டி.எஸ்.பி.யாக பெரம்பலூரை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் நடித்துள்ளார்.
கவுரவ வேடத்தில் பருத்தி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சேலம் சரவணன், அஸ்மிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை தியேட்டரில் பார்ப்பது நன்றாக உள்ளது. கருங்கூந்தல் அழகுக்காரி, சிறுவாட்டு மனசைத்தாடி என்ற பாடல் இணையதளங்கள், கார்களில் ஹிட்டாகி திரும்ப திரும்ப ரசிகர்களால் கேட்கப்படுகிறது.