It is better to get a perfect for CM, palapisekam and take palkutam in Perambalur
பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, பெரம்பலூர் மாவட்ட அதிமுக கட்சியின் அம்மா பேரவை சார்பில் பால்குடம் எடுத்து கொண்டு மலையேற்றம் செய்தனர்.
குன்றில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உள்ள சுவாமிக்கு பாலபிசேகம் நடத்தினர். கோவிலில், உள்ள வெள்ளித் தேரை இழுத்து கோயிலை சுற்றி வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர், அங்கிருந்த பக்தர்களுக்கும், தொண்டர்களுக்கும், பொங்கல், புளியோதரை போன்றவற்றை அன்னதானமாக வழங்கி பிரார்த்தனை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன், சிதம்பரம் தொகுதி எம்.பி., மா.சந்திரகாசி, ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன், குரும்பாபாளையம் நாகராஜ் உள்பட ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.