It is better to get the Chief on behalf atimukavinar kunnam atikumpesvarar yajna in the temple, annadanam

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் குன்னம் அதிமுகவினர் சார்பில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதில் அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி சந்திரகாசி, பெரம்பலூர் எம்.எல்.ஏவும், அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் வேப்பூர் கிருஷ்ணசாமி, ஆலத்தூர் கர்ணன், அம்மா மாவட்ட பேரவை செயலாளார் செந்துறை கார்த்திகேயன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை அம்மா மாவட்ட பேரவை இணைச்செயலாளார். குன்னம் கிளை அதிமுக, குன்னம் ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497