Lakshmi Test Tube Baby Center: Perambalur will inaugurate tomorrow the A.Raja.
பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனையின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக லட்சுமி டெஸ்ட் டியூப் பேபி சென்டர் ( செயற்கை கருதரிப்பு மையம்)
நாளை முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.இராஜா நாளை காலை 9 – 10.30 மணிக்குள் திறந்து வைக்க உள்ளார்.
இது குறித்து மருத்துவர் கருணாகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் பகுதியில் குழந்தையில்லா தம்பதிகளின் குழந்தைபேறு அடைய வெளியூர்களுக்கு நீண்ட தூரம் சென்று வருகின்றனர். நேரம், பொருட் செலவை மிச்சம் செய்யும் வகையில், நமது பெரம்பலூரிலேயே லட்சுமி டெஸ்ட் டியூப் பேபி சென்டர் ( செயற்கை கருதரிப்பு மையம் ) மிக குறைந்த கட்டணத்தில், ஜப்பான் தொழில் நுணுக்கங்களுடன், அதி நவீன கருவிகள் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
ஸ்பெர்ம் பேங் மற்றும் எம்பீரியோ பிரிஷிங், 3டி, 4டி ஸ்கேன் வசதிகள், மற்றும் ஐ.யூஐ, ஐ.சி.எஸ்.ஐ முறைகள் மூலம் செயற்கை கருதரிப்பு செய்யப்பட உள்ளது. அதிநவீன இங்குபேட்டர்கள், மற்றும், இக்ஷி மெசின்களுடன் நாளை முதல் செயல்பட உள்ளது. இதற்கென தனியாக ஒரு சிறப்பு மருத்துவ குழுவினரும் செயல்பட உள்ளனர்.
இந்த மையத்தினை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராஜா திறக்க வைக்க உள்ளார். அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம், செயற்கை கருதரிப்பு குறித்த பல்வேறு விளக்கங்களை கூறினார். செயற்கை கருத் தரிப்பு குறித்த அனைத்து ரகசியங்களும், பாதுகாக்கப்படும் என்றும், முன்றாம் நபர் எவருக்கும் எந்த சூழ்நிலையிலும் அறிய முடியாது என்றும் தெரிவித்தார். அப்போது மருத்துவர் ஜெயலட்சுமிகருணாகரனும் உடன் இருந்தார்.