Local Body elections in the perambalur district 735 polling stations
நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடானான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 735 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
நகரப்பகுதியில் 10 வாக்குச்சாவடி மையங்களும், கிராமப்பகுதிகளில் 20 வாக்குச்சாவடி மையங்களுமென மொத்தம் 30 வாக்குச்சாவடிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 112 வாக்குச்சாவடிகளும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 179 வாக்குச்சாவடிகளும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 173 வாக்குச்சாவடிகளும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 168 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 637 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
பெரம்பலூர் நகராட்சியில் 43 வாக்குச்சாவடிகளும், அரும்பாவூர், பூலாம்பாடி – லப்பைகுடிகாடு – குரும்பலூர் ஆகிய 4 பேரூராட்சிகளிலும் தலா 15 வீதம் 60 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் பெரமபலூர் மாவட்டத்தில் 735 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
வாக்குச்சாவடி மையங்களின் விபரங்கள் அனைத்து ஊராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரக அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் 13.09.16 வரை எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், இத் தேர்தலில் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் 1,80,929 ஆண் வாக்காளர்களும், 1,85,936 பெண் வாக்களர்களும், இதர 9 நபர்களும் என மொத்தம் 3,66,874 வாக்காளர்களும்,
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் 18,157 ஆண் வாக்காளர்கள், 19,058 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 37,215 வாக்காளர்களும், 4 பேரூராட்சிகக்கு உட்ப்பட்ட பகுதிகளில் 18,758 ஆண் வாக்காளர்களும், 19,669 பெண் வாக்காளர்களும், 2 இதர நபர்களும் என மொத்தம் 38,429 நபர்கள் என மொத்தமாக 2,17,844 ஆண் வாக்காளர்களும், 2,24,663 பெண்வாக்காளர்களும், இதர 11 நபர்கள் என மொத்தம் 4,42,518 வாக்காளர்கள் உள்ளனர் என தகவல் தெரிவிக்கப்ட்டது.
இக்கூட்டத்தில், அரசு பணியாளர்கள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.