medical treatment to students of pallakkalinkaraya Nallur in perambalur district
பெரம்பலூர் மாவட்டம், அகரம் சீகூர் அருகே உள்ள பள்ளக்காலிங்கராய நல்லூர் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மேலும் வரத்துவாய்காலில் நீண்டநாட்களாக தேங்கி உள்ள கழிவுநீரால் கொசுத்தொல்லை இருந்து வந்தது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு மர்ம காய்ச்சலால் அவதியுற்றனர்.
இதை சரிசெய்யவும், மருத்துவ சிகிச்சை வேண்டியும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு பிரிவு மருத்துவர் டாக்டர்.அரவிந்த் தலைமையில் மருத்துவர் பிரபு, டிஎம்ஓ சுப்ரமணியன், வட்டார மேற்பார்வையாளர் இளங்கோவன், அறிவழகன் ஆகியோர் கொண்ட மருத்துவர் குழுவினர் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.