MP Arun Nehru campaigned for Perambalur DMK candidate Jayalakshmi in Arumbavur.

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் S.T.ஜெயலெட்சுமியை ஆதரித்து, அருண்நேரு. எம்.பி., அரும்பாவூர் பேரூராட்சியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.பின்னர், பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். திமுகவை மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன், பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை, துணைத் தலைவர் சரண்யா குமரன், விசிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதிதமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனித நேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்ள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இன்று காலை, பெரம்பலூர் ஒன்றியம், எளம்பலூர் கிராமத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடம் ஒன்றிய செயலாளர் எம்.இராஜ்குமார் தலைமையில் திமுக வேட்பாளர் ஜெயலட்சுமி வாக்குகளை சேகரித்தார். அப்போது, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், எளம்பலூர் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சித்ராதேவி மற்றும் கே.சி.ஆர் குமார் உள்ளிட்ட தி.மு.க.வினர் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!