My gratitude to the candidates of the Perambalur and Kunnam constituencies, the functionaries who worked for the election campaign, and the voters who cast their ballots! — Statement by V. Jagadeesan, District DMK In-charge.

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களுக்காக இரவு பகல் பாராமல் தேர்தல் பணியாற்றிய தி.மு.க. மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கோடான கோடி நன்றியை மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

2026 பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் டாக்டர் ச.த. ஜெயலெட்சுமி, குன்னம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா‌.சி. சிவசங்கர் ஆகிய இரு வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க இரவு, பகல் பாராமல் தேனீக்களை போல சுறு,சுறுப்பாக பணியாற்றிய பெரம்பலூர், குன்னம் தொகுதியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஒட்டு மொத்த நிர்வாகிகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், முன்னாள்,இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வார்டு மற்றும் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஒட்டு மொத்த நிர்வாகிகள், தொண்டர்கள், கழகத்தின் எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் அல்லும் பகலும் அரும்பணியாற்றிய கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மற்றும் 2 தொகுதிகளிலும் வாக்களித்த வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கோடானு, கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்‌, என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!