Near constituency MLA, MP, delivered a Perambalur people Pongal gift set

மாற்றொரு தொகுதி எம்.எல்.ஏ, எம்.பி., பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினர்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெரம்பலூர் தொகுதி எம்.பி மருதைராஜா, எம்.எம்.ஏ இரா.தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் பணிக்காரணமாக வரா இயலாததால் அருகே உள்ள குன்னம் தொகுதி எம்.எல்.ஏவும், மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான சந்திரகாசி மூலம் வருவாய் துறை, மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பொங்கல் பரிசுகளை வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வரும் பொங்கல் பண்டிகை 2017-ஐ முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைகள் , காவலர் குடும்ப அட்டைகள் மற்றும் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் மொத்தம் 1,64,455 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் தொகுப்பில் பச்சரிசி ஒரு கிலோ, சீனி ஒரு கிலோ, முந்திரி பருப்பு 20 கிராம், உலர்திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் கரும்புத்துண்டு (2 அடி) ஒரு எண்ணம் ஆகியன வழங்கப்படுகிறது.










kaalaimalar2@gmail.com |
9003770497