Official denounced the sleeping pills and tried to commit suicide by eating a lady doctor
pills
அதிகாரி திட்டியதால் தூக்க மாத்திரை சாப்பிட்டு அரசு பெண் வைத்தியர் தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளரிடம் புகார் தெரிவிக்கப்ட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாபுஸ்ரீ என்ற வைத்தியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ராம்விவேக்கும் அரசு வைத்தியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று பெண் வைத்தியர் பாபுஸ்ரீ தனது வீட்டில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சையால் உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வைத்தியர் பாபுஸ்ரீ தன து க ண வர் ராம்விவேக் மற்றும் உறவினர்களுடன் சென்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் நந்தகுமாரை சந்தித்தும், தமிழ்நாடு மருத் துவ அலுவலர்கள் சங்க மாநி லச் செய லா ளர் கதிர்வேலிடமும் புகார் மனுவை கொடுத்தனர்.

அதில் நான் கடந்த டிச.15ம் தேதி எளம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்து கொண்டி ருந் த போது, ஆய் விற் காக வந்த பெரம் ப லூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சம்பத், சிறு சிறு குறைகளைக் கண்டறிந்துடன் அதற்காக நோயாளிகள் முன் னிலையில் என்னை கண்டித்து திட்டினார்.

எளம்பலூரில் கிராம சுகாதார செவிலியர் 3 பேரில் 2 பேர் விடுப்பில் உள்ளதால் அவர்களது பணிகளை யும் தானே சேர்த்து கவனித்து வருவதாகவும், அதனால் வேலைப் பளு அதிகமிருப்பதாக பதில் கூறி யும், அதனை ஏற்காத மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மேலும் கடுமையாகத் திட்டினார் என்றும், அதனால், மன உளைச்சலுக்கு ஆளான காரணத்தால் தான் தூக்க மாத் திரை உட் கொண்டு தான் தற்கொலைக்கு முயன்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சிப் பணியாளர் விசாரணைக்கு உத்திரவிடுவாத தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!