Ogalur High School annual Ceremony

பெரம்பலூர் மாவட்டம், ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் நாகராஜன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ராமராசு முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மங்களமேடு டிஎஸ்பி ஜவகர்லால் பேசியதாவது :

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை கடைபிடித்து முன்னேற வேண்டும். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அடிக்கடி கூறும் வார்த்தை கனவு காணுங்கள் என்பார். அதை மாணவர்கள் கடைபிடித்து தங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் மட்டுமே மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டு விழாக்கள் அதிகம் நடைபெறும். ஆனால் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவித்து இதுபோன்ற ஆண்டு விழா நடத்துவது பாராட்டுக்குரியது. தனியார் பள்ளிகளை போல் ஒகளூர் மேல்நிலைப்பள்ளியும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு பாடுபட்ட தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டுகிறேன்.

1960ல் தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் வரும் பொதுதேர்வில் அனைவரும் வெற்றி பெற்று மீண்டும் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்று பேசினார். பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகளை மங்கள்மேடு டிஎஸ்பி ஐவகர்லால் வழங்கினார்.

விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் அன்பானந்தன், சத்தியமனை தலைமையாசிரியர் தேசிங்குராஜன், ஊர் பெரியவர் அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!