Former soldiers call upon the nominees to apply for the help of the poor
நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் வறியோர் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் விதவையர்கள் மத்தியஅரசிடமிருந்து இன்டர்நெட் மூலம் கடந்த மார்ச் 1ம் தேதி அன்று 65 வயது பூர்ர்த்தியடைந்தவர்கள் வறியோர் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வரும் 2019ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். கல்வி உதவித் தொகை பெறுவதற்கு ஒன்றாம் முதல் 9 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் 10,12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 30ம் தேதிவரையிலும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் நவம்பர் 30ம் தேதிவரையிலும் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே வறியோர் நிதியுதவி பெற்றுவர்கள் உயிர்சான்றினை வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் புதுப்பித்து பயனடைலாம். அவ்வாறு இன்டர்நெட் மூலம் விண்ணப்பித்து டவுன்லோடு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலினை நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அலுவலக வேலை நாட்களில் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.