Perambalur: 10.5 pounds of jewelry stolen from the house of a person who went to watch a dance performance!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சில்லக்குடி கிராமம். அங்கு நேற்று கோயில் திருவிழா நடந்ததால், ஊர் மக்கள், விருந்தினர், உறவினர்கள் கண்டுகளிக்க ஆடல் - பாடல் நிகழ்ச்சி இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை ஊர் மக்கள் கண்டுகளித்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல் மனைவி ஜனனியும் (40) வீட்டை பூட்டி சாவியை முற்றத்தில் வைத்துவிட்டு சென்றிருந்தார். ஆடல் - பாடல் நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதோடு, வீட்டின் பீரோவும் உடைக்கப்பட்டு கிடப்பது குறித்து அதிர்ச்சி அடைந்து அவர் பார்த்த போது,
மர்ம நபர்கள், வீட்டின் சாவியை எடுத்து பூட்டை திறந்து, வீட்டுக்குள் சென்று , பீரோவை உடைத்து, அதிலிருந்த சுமார் 10.5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து ஜனனி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த குன்னம் போலீசார் மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் மர்ம நபர்கள் விட்டுச் சென்ற தடயங்களை கைப்பற்றி போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ. 7.5 லட்சத்திற்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.