Perambalur: A young man who went to bathe in a well drowned and died!
பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் துரைராஜ் (36), தொழிலாளி. இன்று காலை அந்த ஊரில் உள்ள சிவன் கோயில் அருகே குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடிய போது அவருடைய உடைமைகள் கிணற்றின் மேல்பகுதியில் கிடந்துள்ளது. உடனடியாக அவரது உறவினர்கள் பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு மற்றும் மீட்பு படை உதவியுடன் கிணற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, இன்று காலை சுமார் 11.30 மணிக்கு துரைராஜின் சடலத்தை மீட்ட தீயணைப்பு படையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருமணமாகத துரைராஜீக்கு சில நேரம் வலிப்பு நோய் வரும் என தெரியவந்துள்ளது. கிணற்றில் மூழ்கி இறக்க காரணம் என்ன என்பதை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாடாலூர் சுற்று வட்டாரப் பகுதியில் இது போன்று அடிக்கடி கிணற்றில் மூழ்கி இளைஞர்கள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.