Perambalur: Additional Classroom Buildings Worth ₹60 Lakhs in Vayalappadi Village; Minister Sivasankar Inaugurates Them!

பெரம்பலூர் மாவட்டம், வயலப்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 3 வகுப்பறைகளை கொண்ட கட்டடத்தை இன்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாணவர்கள் ஆசிரியர்கள், முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சேகர், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், அழகு.நீலமேகம், ராஜேந்திரன், முன்னாள் வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பல் டாக்டர் கருணாநிதி மற்றும் ஒப்பந்தாரர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497