Perambalur: AIADMK Candidate Ilambai R. Tamilselvan Canvasses for Votes at Weekly Market!

பெரம்பலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் நேற்று குரும்பலூர் பேரூராட்சியில் வாக்குகளை சேகரித்தார். பாளையத்தின் முகப்பு பகுதியில் அவருக்கு சிற்பான வரவேற்பு பேரூர் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் அதிர்வேட்டுகள் முழங்க, மாலை மரியாதையுடன் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். அங்கிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர். வேட்பாளர் பிரச்சாரம் செய்து கொண்டு வந்த போது அந்த ஊரில் நடந்த காய்கறி வாரச்சந்தையில் அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களிடம் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் வாக்குகளை சேகரித்தார். பின்னர் பொதுமக்களிடம் பேசியதாவது:

உங்களை நாடி, உங்கள் இல்லங்களைத் தேடி, இரட்டை விரலைக் காட்டி, இன்முகத்தோடு உங்கள் வாசல் முற்றத்தில் நிற்கிறேன். எனக்கு இரட்டை இலைச் சின்னத்திலே வாக்களியுங்கள், என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். இந்தத் தொகுதியினுடைய வளர்ச்சிக்கு பல்வேறு பொறுப்புகளைக் கொண்டு வந்து சேர்ப்பேன் என்ற உத்தரவாதத்தை வழங்கி…இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக எடப்பாடியார் ஏன் வரவேண்டும்? அடிப்படையில் அவர் ஒரு விவசாயி. ‘என்னை தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக்குங்கள், விவசாயிகள் வாங்கியிருக்கக்கூடிய வங்கிக் கடனை ரத்து செய்வேன்’ என்று அறிவித்திருக்கிறார்.

எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும்! தமிழ்நாட்டினுடைய முதலமைச்சரானவுடன் முதல் கையெழுத்து, தாய்மார்கள் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் ரூபாய் 10,000 வரவு வைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். எடப்பாடியார் இந்த நாட்டினுடைய முதலமைச்சராக வேண்டும். மாவட்டத்தில் இருக்கிற சிறு, குறு விவசாயிகளுடைய பிள்ளை, அரசுப் பள்ளியில் படித்த பிள்ளைகளும் டாக்டராக வேண்டும் என்கிற மருத்துவக் கனவை 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் ஆண்டிற்கு 400 முதல் 420 ஏழைப் பள்ளி பிள்ளைகளை டாக்டராக்கிய விவசாயி எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும். அதற்காக நீங்கள் இரட்டை இலைச் சின்னத்திலே வாக்களிக்க வேண்டும். தாலிக்குத் தங்கம் வழங்கிய தங்க மனதுத் தலைவி புரட்சித் தலைவி அம்மாவினுடைய பொன்னான திட்டத்தை காலில் போட்டு உதைத்துவிட்டு, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சட்ட ஒழுங்கை சீர்கேடாக்கி இன்று சந்தி சிரிக்க வைத்திருக்கிற முதலமைச்சர், கொஞ்சமும் கூச்சமில்லாமல், வெட்கமில்லாமல் தமிழ்நாட்டு மக்களை மீண்டும் என்னை முதலமைச்சராக்குங்கள் என்று நாடகம், வேடமிட்டு வந்து கொண்டிருக்கிறார். இதையும் ஸ்டாலினை தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. ஏனென்றால் அவர் குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செயலாளர், வருங்கால தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர், ஏழை எளியவர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், சகோதரிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடுகின்ற நல்ல பல திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்குத் தந்து, பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையிலே சொல்லியிருக்கிற எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும்.”

பாளையமே என்பது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கோட்டை, இரட்டை இலையின் கோட்டை, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுடைய கோட்டை. இவர்கள் இருவரும் இணைந்திருக்கிற போது பாளையத்தில் எவனாலும் உள்ளே நுழைய முடியாது. இரட்டை இலை ஜெயிக்கும் ஜெயிக்கும் என்கிற அளவுக்கு அண்ணா திமுக தொண்டர்களோடு களமாடிக் கொண்டிருக்கிற பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முக்கனிச் சுவையோடு இன்றைக்குப் பாளையத்தில் அண்ணா திமுக தான் இரட்டை இலைச் சின்னத்தில் முதலிடத்தைப் பிடிக்கும்! எழுச்சியான வரவற்பை கொடுத்திருக்கிற அனைவருக்கும் நன்றி எனவும்,

ஒரு சட்ட மன்ற உறுப்பினர் என்பவர், பாளையத்தில் இருந்து ஒருவர் மனுவுடன் வந்தால், சரி, கிடைத்த ஐந்து நிமிடத்தில் அவரைப் பார்த்து, சொல்வதைக் கேட்டு, கனிவோடு அனுப்ப வேண்டும்.

மாடியில் உட்கார்ந்து கொண்டு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு, ஏசியில் அமர்ந்து கொண்டு பாளையத்தில் இருந்து வந்திருக்காரா? இருக்கட்டும், இன்னும் அரை மணி நேரம் என்று சொல்லுகிறவரெல்லாம் சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் உங்களை வாக்கை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்னை நீங்கள் புரிந்து புதிதாக தெரிந்து கொள்வது ஒன்றுமில்லை. சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும், வெற்றி வாய்ப்பை இழந்த போதும் என்னுடைய மக்கள் பணி செய்வதுதான் கடமை என்று கருதி, மாவட்ட அலுவலகத்திலேயே உட்கார்ந்து வருகிற பொதுமக்களுக்கு என்னாலான சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.

ஆகையால் மீண்டும் எனக்கு ஆணையிடுங்கள் உங்கள் வாக்குகளின் மூலம். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள், உங்களுக்கு தொண்டனாக காத்துக் கொண்டிருக்கிறேன், காத்துக் கொண்டிருக்கிறேன் என்று உங்கள் பாதம் பணிந்து கேட்டு வாக்களிப்பீர் வெற்றிச் சின்னம்… வாக்களிப்பீர் வெற்றிச் சின்னம்… வெற்றி பெறச் செய்வீர் வெற்றிச் சின்னம்… உங்கள் சின்னம் வெற்றிச் சின்னம்… உங்கள் சின்னம் வெற்றிச் சின்னம்… நன்றி, வணக்கம்.”

சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், வெற்றி வாய்ப்பை இழந்தபோதும், என்னுடைய மக்கள் பணி செய்வதுதான் கடமை என்று கருதி, மாவட்ட அலுவலகத்திலேயே உட்கார்ந்து வருகிற பொதுமக்களுக்கு என்னாலான சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.

ஆகையால் மீண்டும் எனக்கு ஆணையிடுங்கள் உங்கள் வாக்குகளின் மூலம். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள், உங்களுக்குத் தொண்டாற்றக் காத்திருக்கிறேன், காத்திருக்கிறேன் என்று உங்கள் பாதம் பணிந்து கேட்டு…

வாக்களிப்பீர்! (கூட்டம் :)இரட்டை இலை!!
வெற்றிச் சின்னம்! இரட்டை இலை!!
வாக்களிப்பீர்! இரட்டை இலை!!
வெற்றிச் சின்னம்! இரட்டை இலை!
உங்கள் சின்னம்: இரட்டை இலை!
வெற்றி பெறச் செய்வீர்! நன்றி, வணக்கம்.” என பேசினார்.

குரும்பலூர் பேரூர் செயலாளர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ பூவை.செழியன், பெரம்பலூர் பாஜக மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன், முன்னாள் பேரூர் செயலாளர் செல்வராஜ், பாஜக மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன், பாமக மாவட்டத் தலைவர்: செந்தில்குமார், பாமக மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் தங்கதுரை, பாமக தலைமைச் செயற்குழு உறுப்பினர் இன்ஜினியர் கண்ணபிரான், பாஜக ஒன்றியத் தலைவர் கார்த்தி, பாஜக பிரமுகர் தவசி. அன்பழகன், தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பின் தலைவர் ரெங்கராஜ் நாயுடு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பாலசுப்ரமணியன், தேவேந்திர கூட்டமைப்பின் தலைவர் தேவேந்திர பாலாஜி, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் ராணி, துணைச் செயாலாளர் லெட்சுமி, அண்ணா தொழிற்சங்க வீரபாண்டியன், விவசாய அணி பிரிவு கருணாநிதி, களரம்பட்டி து.வெள்ளையன் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!