Perambalur: AIADMK Candidate Tamilselvan accorded an enthusiastic welcome by party cadres amidst the resounding burst of firecrackers!

பெரம்பலூர் தனித் தொகுதியில் 4வது முறையாக களம் காணும் அஇஅதிமுக வேட்பாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் சென்னையில் பெரம்பலூர் இன்று காலை வந்ததையடுத்து அவருக்கு கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய பேரூர், கிளை மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பெரம்பலூர் மாவட்ட எல்லையான திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பெரம்பலூர் 4 ரோடு சந்திப்பிற்கு வந்த அவருக்கு கட்சியினர் அதிர்வேட்டுகள் முழங்க கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஐஜேகே, பாஜக, பாமக, தாமக உள்ளிட்ட கட்சியினர் அவருக்கு வரவேற்று சால்வை வாழ்த்துகளை தெரிவித்தனர். கட்சி அலுவலகத்தில் அவருக்கு கட்சி தொண்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497