வரும்; 16 ம் தேதி நடைபெறும் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சியினருக்கும் உச்ச கட்ட பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பெரம்பலூரில் இன்று மாலை 4 மணி அளவில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக உச்ச கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டது.
திமுகவினர் வேட்பாளர் சிவகாமியை ஆதரித்து பாலக்ரை அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம் சங்குப்பேட்டை, வழியாக பழைய பேருந்து நிலையம் அடைந்து அங்கு அனுமதி பெற்று பிரச்சாரம் நடத்தி கொண்டிருந்தனர்.
சற்று ஏறக்குறைய அதே நேரத்தில் புதிய பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் சிலை அருகே அதிமுகவினர் மாலை 4.30 மணி அளவில் வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரத்திற்கு புறப்பட்டனர். அவர்கள், பாலக்கரை, துறைமங்கலம், வெங்கடசபுரம், சங்கு, கனரா வங்கி, வழியாக பழைய பேருந்து நிலையம் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை காவல் துறை அரணாரை சென்று வருமாறு திருப்பி விட்டனர். அரணாரை சென்று பெரம்பலூர் வந்த அதிமுகவினர் பழைய பேருந்து நிலையம் வழியாக மதரஸா சாலை செல்ல முயன்ற போது திமுகவினர் முன்பு காவல் துறையினர்அரண் அமைத்து அதிமுகவினரை செல்ல அனுமதித்தனர். அப்போது இருதரப்பும் கோசங்களை எழுப்பியது. அதனால் கொடிகளை உயர்த்தி பிடித்தும், கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதில் தள்ளு முள்ளு ஏற்பட்டதில் திமுகவினர் கூட்டத்தில் இருந்த ஒருவர் காலணியை அதிமுக கூட்டத்தில் வீசினார். அப்போது, முன்னாள் அமைச்சர் ஆ.இராசா அமைதி காக்கும்படி ஒலி பெருக்கியில் கேட்டுக் கொண்டார். ஆனால், அதிமுகவினருக்கு வழிவிடும் படி அறிவிக்கவில்லை. அப்போது நேரம் மாலை 5.30 மணி ஆகிவிட்டது. மாலை 6 மணிக்குள் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி பிரச்சாரம் முடிவடைவதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசர் கடுமையான முயற்சியில் அதிமுகவினருக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிமுக தொண்டர்கள் ஜீப் மீது ஏறி சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக வெளியேற்றினர். அப்போது ஜீப்பில் இருந்த பெரம்பலூர் அதிமுக நகர செயலாளர் இரா.பூபதி,தொண்டர் நாகராஜ், தவறி விழுந்ததில் அவரின் மண்டை உடைந்தது. தள்ளு முள்ளு ஏற்பட்டதை தடுக்க இரு தரப்பினர் மீதும் போலீசார் தடியடி நடத்தினர். மோதலை தடுத்து அதிமுகவினரை பாதுகாப்பாக பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேற்றினர்.
பின்னர், அதிமுக தேர்தல் அலுவலகத்தில் குவிந்த அதிமுகவினர் அவ்வழியே வரும் திமுக வினர் மற்றும் ஆ.இராசா வை முற்றுகையிடலாம் அல்லது மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என கருதிய போலீசார், அதிமுக அலுவலகத்திற்கு முன்பு 100 மீட்டருக்கு முன்பாக திமுகவினரை மாற்றுப் பாதையில் அனுப்பி வைத்தனர். அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிர படுத்தி உள்ளனர்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கை செய்யாமல், ஒரே நேரத்தில் இரு கட்சிகளுக்கும் அனுமதி வழங்கியதே பிரச்சனைகளக்கு காரணமானது.