Perambalur: Alathur AIADMK Union Youth Wing Secretary C. Nagarajan – wedding ceremony at the home of Muthamizhselvan; happening tomorrow!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெரிய வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் N.V மருதமுத்து – சின்னம்மாள் இவர்களின் மகன் வழி பேரனும், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் ஆக்கனூரை சேர்ந்த சதாசிவம் – சரஸ்வதி இவர்களின் மகள் வழி பேரனும், நல்லாசிரியரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியின் பொருளாளருமான முத்தமிழ்ச்செல்வன் -மங்கையர்க்கரசி இவர்களின் மகனும் இன்ஜினியருமான பரத்திற்கும்,.. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், குரும்பாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி – மீனாட்சி இவர்களின் மகன் வழி பேத்தியும்.. ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் நயினப்ப உடையார் – தனபாக்கியம் இவர்களின் மகள் வழி பேத்தியும்,அதிமுக ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி செயலாளரும், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவருமான சி. நாகராஜன் – லதா ஆகியோரின் மகளுமான பொறியாளர் பிரியதர்ஷினிக்கும்..

முத்தமிழ்ச்செல்வன் – மங்கையர்கரசி
திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, பெரம்பலூர் கவுல்பாளையம் ஸ்ரீஅம்மன் மஹாலில் நாளை காலை திருமணம் நடக்கிறது. இதில் முன்னால் எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளருமான இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் மற்றும் ஆலத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் என்.கே. கர்ணன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் முன்னாள், இந்நாள் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு சங்கத்தினர், கூட்டணி கட்சியினர் பலர் பெரும் திராளக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.
நாகராஜன் – லதா
கொடி, தோரணங்கள், வரவேற்பு பதாகைகளால் விழாக்கோலம் கொண்டுள்ளது. திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை தினேஷ் – காவியா தினேஷ், அக்ரி என்.பிருத்திவிராஜன், டாக்டர் என் உதயகுமார். மணப்பெண்ணின் தாய்மாமனும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், பெரம்பலூர் மாவட்ட அதிமுக மாணவரணி துணை செயலாளருமான என் ராஜா @ ராஜ்குமார், டாக்டர் பிரபாவதி, இன்ஜினியர் ராகுல் உள்பட இருவீட்டு உறவினர்கள், நண்பர்கள் கட்சியினர் தடபுடலாக செய்து வருகின்றனர்.