Perambalur: Applications Invited for Admission to Special Grade Sports Hostel; Collector Informs!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், கல்லூரிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவு வசதியுடன் விளையாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

2026–2027 ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ / மாணவிகளுக்கான சேர்க்கைக்கு 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 01.07.2001 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவும், 01.07.2009 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.
UG Admission: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் மாணவ/மாணவியர்கள் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர்க்கப்படுவர். தேசிய, மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

PG Admission: முதுநிலை பட்டப்படிப்பு (Postgraduate) முதலாம் ஆண்டு படிப்பில் சேர்வதற்காக இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இளநிலைப் படிப்பின் போது சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ / மாணவியர்கள், சிறப்பு நிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி நாள்: 26.03.2026 அன்று மாலை 5.00 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மேலும், தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ / மாணவியருக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் தடகளம் (ஆ) & (பெ), பளுதூக்குதல் (ஆ) & (பெ), ஜுடோ (ஆ) & (பெ), வாள்விளையாட்டு (ஆ) & (பெ), கால்பந்து (ஆ), கையுந்துபந்து (ஆ) & (பெ) ஆகியோர்களுக்கும், சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் கூடைப்பந்து (ஆ) & (பெ), குத்துச்சண்டை (ஆ) &(பெ), கால்பந்து (பெ), கைபந்து (ஆ) & (பெ) ஆகியோர்களுக்கும், சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் ஹாக்கி (ஆ) & (பெ), கபாடி (ஆ) & (பெ) ஆகியோர்களுக்கும் 30.03,2026 அன்று காலை 7.00 மணி முதல் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் தவறாது கலந்து கொண்டு வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!