Perambalur: Collector’s information on awards for excellent service to those who have worked for the welfare of the differently-abled and institutions!

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த பணியாளர்/ சுயதொழில் புரிபவர், கை, கால் பாதிக்கப்பட்டோர் (LD) தொழுநோயிலிருந்து குணமடைந்தோர், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறையுபாடுடையோர், பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, புறவுலக சிந்தனையற்றோர், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, மன நோய், இரத்தம் உறையாமை, இரத்த அழிவுச்சோகை, அரிவாளனு இரத்தச் சோகை, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, நடுக்கு வாதம், பல்வகை குறைபாடு ஆகியோர் என மொத்தம் பத்து விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், ஹெலன்கெல்லர் விருது பெற பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறை உடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்கள் என இரண்டு விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களும்,

சிறந்த ஆசிரியருக்கு ( அறிவுசார் குறையுடையோருக்கு கற்பித்தல்) ஒரு விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும், சிறந்த சமூகப் பணியாளருக்கு ஒரு விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், மாற்றுத்திறனாளிக்களுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ஒரு விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும்,ஹெலன்கெல்லர் விருதுக்கு ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் ஒரு விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும்,

ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் (அறிவுசார் குறையுடையோருக்கு) கற்பிக்கும் சிறந்த ஆசிரியருக்குஒரு விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இரண்டு விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், பொதுக் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்க இரண்டு விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், என மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்த ஆசிரியர்கள், சமூகப் பணியாளர்கள்,தொண்டு நிறுவனங்கள்,அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சிறந்த சேவைக்கான விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 03.12.2025 அன்று நடைபெறவிருக்கும் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்பட உள்ளார்கள்.

எனவே, மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விருதாளர்கள் https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விபரங்களை பதிவு செய்தும் கோரப்பட்டுள்ள விபரங்களை இணைத்தும் 26.10.2025 க்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் மேலும் விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 26.10.2025 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்பித்து, பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!