Perambalur Collector’s Order: Top-ranking officials from all departments conducted on-site inspections at schools!

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. கலெக்டர் ஷரண்யா உத்தரவின் பேரில் அனைத்து துறைகளின் முதல் நிலை அலுவலர்களும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தும் முறை குறித்தும், பாடபுத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் பள்ளிகளிக்கு சென்றுவிட்டதா, அவை மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றதா என்பது குறித்தும், பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா எனவும் முதல் நிலை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இத்தகைய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுவதன் மூலம், மாணவர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி தரமான கல்வியும், தேவையான வசதிகளும் கிடைப்பது உறுதி செய்யப்படும். பள்ளிகளில் அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றதா, என்னென்ன வசதிகள் தேவைப்படுகின்றது என்பன உள்ளிட்ட தகவல்களை இன்றைய ஆய்வின் அடிப்படையிலான அறிக்கையாக அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆய்வின்போது கண்டறியப்படும் குறைபாடுகள் உடனடியாக சரிசெய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!