Perambalur: Court sentences man to life imprisonment and fine in dowry-demanding case, incites woman to suicide
பெரம்பலூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தில், வரதட்சனை கேட்டு துன்புறுத்தி, தற்கொலைக்கு தூண்டிய கணவர், மாமியார், கொழுந்தன் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டணை விதித்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம், விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளிர் நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமம், அண்ணா நகரைச் சேர்ந்த தர்மதுரை @ தர்மா என்பவரின் மனைவி சுபலட்சுமி (20), இவரது மாமியார் கலைச்செல்வி, கணவர் தர்மதுரை, கணவரின் அண்ணன் இளையராஜா ஆகியோ ர் வரதட்சனை கேட்டு கொடுமை ப்படுத்தி, தற்கொலைக்கு தூண்டியதால் (சுபலட்சுமி) கடந்த 2018ம் ஆண்டோ விஷம் சாப்பிட்டு தற் கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பாக குன்னம் காவல் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு, சுபலட் சுமியின் தந்தை ராஜாங்கம்(48), கொடுத்த புகா ரின் பேரில் குன்னம் காவல்நிலைய குற்ற எண்: 229/18 u/s 174(3) Cr.PC @ 304(B), 306 IPC -ன் கீழ் வரதட்சனை கொடுமை மற்றும் தற்கொலை க்கு தூண்டுதல் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகளான குன்னம் அண்ணா நகரைச் சேர்ந்த சுபலட்சுமியின் கணவர் தர்மதுரை @ தர்மா, மாமியார் கலைச்செல்வி கொழுந்தனார், இளையராஜா, மற்றும் உறவினர் ராஜேந்திரன் மகன் முத்து ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற விசாரணையில் இருந்த மேற்படி வழக்கில் இன்று வழக்கின் குற்றவாளிகள் தர்மதுரை @ தர்மா, (30) என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50000 அபராதமும், கலைச்செல்வி (60) இளையராஜா (32) ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண் டனை மற்றும் தலா ரூபாய் 50000 அபராதமும், ராஜேந்திரன் மகன் முத்து என்பவரை விடுதலை செய்தும் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தர விட்டார். இதனையடுத்து குற்றவாளிகள் மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்