Perambalur: Deputy Tahsildar killed in road accident: Revenue officials including Collector pay floral tributes!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் கருணாகரன் (58). இவரின் சொந்த ஊரான பேரளியில் இருந்து பணிக்காக இன்று வேப்பந்தட்டைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக் அரியலூர் – பெரம்பலூர் சாலையில் 4 ரோடு அருகே உள்ள திருமண மண்டபம் அருகே ஆட்டோ மோதிய விபத்தில் தலையில் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பலியான டெபுடி தாசில்தார் கருணாகரன் இல்லத்திற்கு நேரில் சென்ற கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வருவாய்த்துறை சார்ந்த பணியாளர்கள் கருணாகரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.