Perambalur District level for the Chief Minister’s Cup tournament: Winners Details
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி : வெற்றி பெற்றவர்கள் விவரம்
முதலமைச்சர் கோப்பைக்கான, நீச்சல், குத்துச்சண்டை, பென்சிங், ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஜுடோ, டேக்வோண்டோ மற்றும் பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் 21.11.2016 முதல் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகின்றது.
நேற்று நடைபெற்ற போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த 13 பள்ளிகள் 7 கல்லூரிகள் மற்றும் கைப்பந்து, வாள் சண்டை மன்றங்களைச் சார்ந்த அணியினர் என 260 மாணவர்களும், 165 மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இவ்விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பாரத் பள்ளியைச் சேர்ந்த யாழினி என்ற மாணவி முதலிடத்தையும், தரை உடற்பயிற்சியில் வரத விகாஸ் பள்ளியைச் சேர்ந்த பூமிகா என்ற மாணவி முதலிடத்தையும் பெற்றனர்.
ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் தரை பயிற்சியில் வரத விகாஸ் பள்ளியைச் சேர்ந்த என். நவீன் என்ற மாணவர் முதலிடத்தையும், பேரல்லல் பார் பயிற்சியில் தந்தை ரோவர் கல்லூரியைச் சோ;ந்த பி. பிரத்தேஷ் என்ற மாணவரும்; ஹரிசாண்டல் பார் பயிற்சியில் க. பிரகாஷ் என்ற மாணவரும் முதலிடத்தை பெற்றனர்.
பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் 48 கி.கி உட்பட்டவர்கள் பிரிவில் பி. பவ்யா, என்ற மாணவியும், 53 கி.கி உட்பட்டவர்கள் பிரிவில் டி. பிருத்திகா என்ற மாணவியும், 58 கி.கி உட்பட்டவர்கள் பிரிவில் எ.பிரேமி என்ற மாணவி மாணவியும், 75 கி.கி., உட்பட்டவர்கள் பிரிவில் என். நாகபிரியா என்ற மாணவி முதலிடத்தையும்,
ஆகிய புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் முதலிடத்தை பெற்றனர். 69 கி.கி உட்பட்டவர்கள் பிரிவில் அரும்பாவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த க.கொடியரசி என்ற மாணவி முதலிடத்தையும் பெற்றனர்.
ஆண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் 56 கி.கி உட்பட்டவர்கள் பிரிவில் இ.சந்தோஷ் என்ற மாணவர் முதலிடத்தையும், 62 கி.கி, உட்பட்டவர்கள் பிரிவில் வி.இளவரசன் என்ற மாணவர் முதலிடத்தையம், 69 கி.கி உட்பட்டவர்கள் பிரிவில் எஸ்.ஸ்ரீதரன் என்ற மாணவர் முதலிடத்தையும்,
77 கி.கி உட்பட்டவர்கள் பிரிவில் ஆர்.ராஜ்குமார் என்ற மாணவர் முதலிடத்தையும் 85 கி.கி உட்பட்டவர்கள் பிரிவில் ஜி.ஸ்ரீராம் என்ற மாணவர் முதலிடத்தையும் 94 கி.கி உட்பட்டவா;கள் பிரிவில் எம்.சிவா என்ற மாணவரும், 105 கி.கி., உட்பட்டவர்கள் பிரிவில் கே.வர்கீஸ் என்ற மாணவரும் முதலிடத்தை பெற்றனர்.
ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில் 7 ஸ்டார் கைப்பந்து மன்றத்தைச் சார்ந்த அணியினர் முதலிடத்தை பெற்றனர். பெண்களுக்கான கைப்பந்து போட்டியில் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் அணியினர் முதலிடத்தைப் பெற்றனர்.
பெண்களுக்கான ஜுடோ விளையாட்டுப் போட்டியில் 48 கி.கி, உட்பட்டவர்கள் பிரிவில் வரத விகாஸ் பள்ளியைச் சேர்ந்த தி.அபிராமி என்ற மாணவியும், 57 கி.கி., உட்பட்டவர்கள் பிரிவில் ஜி.புனிதா என்ற மாணவியும் 52 கி.கி., உட்பட்டவர்கள் பிரிவில் ஜி.காஞ்சனா என்ற அரும்பாவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவிகள் முதலிடத்தைப் பெற்றனர்.
63 கி.கி., உட்பட்டவர்கள் பிரிவில் எம்.பிரியா என்ற மாணவியும், பெற்றனர்.
ஆண்களுக்கான ஜுடோ விளையாட்டுப் போட்டியில் 60 கி.கி., உட்பட்டவர்கள் பிரிவில் வரத விகாஸ் பள்ளியைச் சார்ந்த ஆர். செந்தமிழ் என்ற மாணவரும், 65 கி.கி., உட்பட்டவர்கள் பிரிவில் தந்தை ரோவர் கல்லூரியைச் சேர்ந்த பி.அஜித் குமார் என்ற மாணவரும், 73 கி.கி, உட்பட்டவா;கள் பிhpவில் எஸ். தனசேகா; என்ற மாணவரும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
ஆண்களுக்கான குத்துச் சண்டை விளையாட்டுப் போட்டியில் 48 கி.கி., வரை உள்ளவர்கள் பிரிவில் எஸ்.விஸ்வநாதன், 48கிஃகி முதல் 52 கிஃகி வரை உள்ளவா;கள் பிhpவில் எம்.குமரன் ஆகிய மேலமாத்தூh; அரசினா; மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் முதலிடத்தையும்,
52கி.கி., முதல் 56 கி.கி., வரை உள்ளவர்கள் பிரிவில் கே. மூர்த்தி 56கி.கி, முதல் 60 கி.கி., வரை உள்ளவா;கள் பிரிவில் எஸ். இளவரசன், 75கிஃகி முதல் 81 கி.கி, வரை உள்ளவர்கள் பிரிவில் எஸ்.ஹரிஸ், ஆகிய பாடாலூர் அரசினர் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றனர்.
64 கிகி., முதல் 69 கி.கி, வரை உள்ளவர்கள் பிரிவில் எளம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பி.ஹரிஹரன் என்ற மாணவர் முதலிடத்தையும் பெற்றனர்.
பெண்களுக்கான குத்துச் சண்டை விளையாட்டுப் போட்டியில் 48 கி.கி வரை உள்ளவர்கள் பிரிவில் எம்.கலைச்செல்வி, 57கி.கி., முதல் 60 கி.கி., வரை உள்ளவர்கள் பிரிவில் கே.லாவண்யா ஆகியோர் மேலமாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவிகள் முதலிடத்தையும்,
48கிகி முதல் 51 கிகி வரை உள்ளவர்கள் பிரிவில் என். ஆனந்தி, 64கி.கி., முதல் 69 கி.கி., வரை உள்ளவர்கள் பிரிவில் எஸ்.மீனாட்சி ஆகிய பாடாலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் முதலிடத்தையும் 51கி.கி., முதல் 54 கி.கி., வரை உள்ளவர்கள் பிரிவில் ஆர். ரம்யா, 54 கி.கி., முதல் 57 கி.கி., வரை உள்ளவர்கள் பிரிவில் எல். ஆபிராமி ஆகியோர் குன்னம் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் முதலிடத்தையும் பெற்றனர்.
60 கி.கி., முதல் 64 கி.கி., வரை உள்ளவர்கள் பிரிவில் அரும்பாவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர்.சினேகா என்ற மாணவி முதலிடத்தையும் பெற்றனர்.
ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் 400மீ இன்டிவிஜுவல் மிட்லே போட்டியில் ஆருத்ரா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆர்.யாஸ்ஹஸ்வி குமார்,1500மீ ப்ரீ ஸ்டைல் போட்டியில் பெரம்பலூரைச் சார்ந்த ஆர்.கலைராஜா, 200மீ பட்டர்பிளை போட்டியில் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த ஆ.வெங்டேசன், 200மீ ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் எம்.நவீன்,200மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியில் என்.தீபக்,100மீ பட்டர்பிளை போட்டியில் பாடாலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.கார்மேகம்,100மீ ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.விக்னேஷ், 100மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியில் ஆர்.பிரதீப், ஆகிய மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றனர்.
பெண்களுக்கான நீச்சல் போட்டியில் 100மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியில் தனலட எம். கஸ்தூரி, 200மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியில் எம்.சத்யா,100மீ பட்டர்பிளை போட்டியில் ஆர்.மகேஸ்வரி,100மீ ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் எம்.நிவேதா, ஆகிய தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை கல்லூரி மாணவிகள் முதலிடத்தைப் பெற்றனர்.
போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.1000-மும், இரண்டாம் பரிசு ரூ.750ம்- மூன்றாம் பரிசு ரூ.500-ம் என மொத்த பரிசுத் தொகை ரூ.4 இலட்சத்து 29 ஆயிரத்து 250 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற போட்டிகளில் தடகளம் மற்றும் கடற்கரை கையுந்துப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
தடகளம் போட்டிகளில் 220 ஆண்கள் 140 பெண்கள் கலந்து கொண்டனர். கடற்கரை கையுந்துப்பந்து போட்டியில் மாணவர்கள் 32 அணியினர் மாணவிகள் 20 அணியினர் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கான 100மீ ஓட்டப்போட்டியில் பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சி.ஆர். விபின்ராஜ், முதலிடத்தையும் 200மீ ஓட்டப்போட்டியில் சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஆர். கேசவன், முதலிடத்தையும்,400மீ ஓட்டப் போட்டியில் ரோவர் பள்ளியைச் சேர்ந்த எஸ்.விஜய் என்ற மாணவர் முதலிடத்தையும்,
400மீ தடைதாண்டும் ஓட்டப்போட்டியில10,000மீ ஓட்டப் போட்டியில் பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் பி.விஜய் முதலிடத்தையும் பெற்றனர்.
பெண்களுக்கான 100மீ ஓட்டப்போட்டியில் ஆர். சங்கீதா என்ற மாணவி முதலிடத்தையும்,400மீ ஹடில்ஸ் போட்டியில் என்.நாகபிரியா, ஈட்டி எறிதல் போட்டியில் பி. குகனேஸ்வரி, கோல்ஊன்றி தாண்டுதல் போட்டியில் டி.பிரித்திகா, நீளம் தாண்டுதல்; போட்டியில் ஜெ.மிஸ்பா அனிதா,200மீ ஓட்டப்போட்டியில் கே.பவானி, 1500மீ மற்றும் 5000மீ ஓட்டப்போட்டியில் ஆர்.கிருத்திகா, சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் அ.பிரேமி ஆகிய புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடத்தையும் 800மீ ஓட்டப்போட்டியில் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பி.ரோசினி என்ற மாணவி முதலிடத்தையும் பெற்றனர்.
வெற்றிப் பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.1000மும்- இரண்டாம் பரிசு ரூ.750ம்- மூன்றாம் பரிசு ரூ.500ம்- என மொத்த பரிசுத் தொகை ரூ.4 இலட்சத்து 29 ஆயிரத்து 250 ரூபாய் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா, தடகளப் பயிற்றுநர் க.கோகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.