Perambalur: District residents should avoid venturing out in the heat unless absolutely necessary; Collector informs.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிக்கையில், பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலைவீசக்கூடும் என்றும், வெயிலின் அளவு 41°செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெயிலில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல் நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுமாறும் கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!