Perambalur: Free tailoring training for village women!

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பெண்களுக்கான தையல் கலை பயிற்சி வரும் 15-12-2025 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது. 31 நாட்கள் இப்பயிற்சி, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் பயிற்சிக்கான உபகரணங்கள், சீருடை, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 50 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் 100 நாள் வேலை அட்டை உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர்,வயது, விலாசம்,கல்வி தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, 100 நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம், பான் கார்டு, சாதி சான்றிதழ் / மாற்று சான்றிதழ், ஆகியவற்றின் நகல், 3 பாஸ் போர்ட் சைஸ் ஃபோட்டோ இணைத்து 13-12-2025 தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்று பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 8489065899/ 9488840328 என்ற தொலைப்பேசிகள் மூலமாக தொடர்பு அலுவலக நேரத்தில் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










kaalaimalar2@gmail.com |
9003770497